அனைவருக்கும் வணக்கம்!!! எனக்கு எழுத பிடுக்கும், ஆனால் ஏனோ தயக்கம் வந்து தொற்றிக்கொள்ளும். கீச்சுலகமும் சில பதிவர்களுமே எனக்கு முன்னோடிகள். அவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு உங்களின் வசையும், வாழ்த்தும் என்னை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையோடு துவங்குகிறேன் என் பதிவினை.
உங்களிடம் பகிரவிருப்பது முழுக்க முழுக்க எனது குடும்பம் பற்றியே. இது எனது முதல் பதிவென்பதால் பிழைகளை தெரியப்படுத்துங்கள் வரும் பதிவுகளில் திருத்திகொள்கிறேன் நன்றி!!!
சாதாரண நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவன் தான் நான். 5 பேர் கொண்ட அழகான குடும்பம். குடும்பத்திற்காகவும் பிள்ளைகளுக்காகவும் மட்டுமே வாழும் (உழைக்கும்) தாய். சுயநலமில்லாமல் கண்டிப்போடும், கவனத்தோடும், தன் வாழ்வினை எங்களுக்காகவே அர்ப்பணித்த, உழைப்பிற்க்கும், தன்னம்பிக்கைக்கும், முயற்சிக்கும், எனது ரோல் மாடலான என் தந்தை. நண்பனாய், பகைவனாய், தம்பியாய், நாரதனாய் ஏன் சமயத்தில் அறிவுரையாளனாய் திகழும் பாசமிகு தம்பி. வீட்டின் கடைக்குட்டி, தந்தையின் செல்லம், தோழி, பாசக்காரி, கோபக்காரி, தங்கமான தங்கை. இது தான் என் குடும்பம்.
தந்தை சிறுவயதில் தான் பட்ட கஷ்ட்டங்களை எங்களுக்கு எடுத்துரைத்து வாழ்க்கையில் வ(ழி)லியை தெளிவுபடுத்தினார் அவரின் உழைப்பினால். சேமிப்புடனும், சிக்கனத்துடனும் அதே வேளையில் எங்களுக்கு எள்ளளவும் குறையுமின்றி கவனித்துகொண்ட தாய். கண்டிப்போடே வளர்க்கப்பட்டோம், அந்த வயதில் வேதனையாக தான் இருந்தது இருப்பினும் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லையே, அதன் அருமையை இப்போது உணர்கிறேன். எம்ட்டன் மகன் திரைப்படத்தை ஒப்பிடலாம் என் வாழ்க்கையோடு. நடிகர் பரத்திற்கு நாசர் ஈரல் ஊட்டிவிடும் காட்சி, சொன்ன வேலையை செய்யாமல் அடிவாங்கும் காட்சி, என பல உள்ளன. இதை அந்த படம் பார்க்கும்போது என் தந்தையிடம் கூறியபோது அவரின் பதில், அப்படி இருந்ததினால் தான் இப்படி இருக்கிறீர்கள். அவருக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை, அப்பழுக்கற்ற மனிதர்.
எங்களை 5ஆம் வகுப்பு வரை மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்க வைத்தனர் எங்கள் பெற்றோர். வழக்கம் போல் கல்விக் கட்டணம் உயர்வு, அதனை சமாளிப்பது கடினம், தந்தையின் அரசாங்க வேலை மட்டுமே துணை, பெரிய வருமானம் என்று சொல்லமுடியாது. பிறகு இரவு பகல் பாராமல் கண் விழித்து மொத்த குடும்பமும் உழைத்தோம். வாழ்க்கை சீர்பெற்றது, 10ஆம் வகுப்பு முடித்து தொழில்துறை படிப்பான டிப்ளோமா சேர்ந்தேன், நன்முறையில் தேர்ச்சி பெற்றேன், கேம்பஸ் இன்டர்வியு மூலம் கோயம்பத்தூரில் 2500 ரூபாய் சம்பளத்தில் பணி நியமனம் கிடைக்கபெற்றேன். அந்த சமயத்தில் எனக்கு அது பெரிய தொகை தான். தந்தைக்கு மகிழ்ச்சி, இருப்பினும் 18வயதில் என்னை வேலைக்கு அனுப்பவேண்டுமா என்ற வருத்தம் அதிகமாக இருந்தது, ஆனால் குடும்ப சூழ்நிலை அறிந்த நான் வேலைக்கு சென்றேன், மாதம் ஒரு நாள் வீட்டிற்கு செல்வேன். ஆண்டுகள் நொடிகளாய் கழிந்தன படிப்படியாய் சம்பள உயர்வு, வாழ்க்கையிலும் முன்னேற்றம், தம்பி B.E முடித்தான், தங்கை சுமாராகத்தான் படிப்பாள், ஆனால் விளையாட்டு, பொதுஅறிவு, ஹிந்தி, கணினி போன்றவைகளில் கைதேர்ந்தவளாய் விளங்கினாள்.
தற்போது துபாயில் பணிபுரிகிறேன், தம்பி M.E பயில்கிறான், தங்கை ஒரு நல்ல இடத்தில் மணமுடிக்கபெற்று கணவரோடும் ஒரு அழகான, அறிவானா, துடுக்கான மகனோடும் சந்தோஷமாக வாழ்கிறாள். எனது பெற்றோரின் ஆசையான, அவர்களின் சொந்த ஊரில் ஒரு வீடு, நிறைவேற்றிவிட்டேன்.
ஆனால் எவ்வளவு கூறியும் கேட்க்காமல், ஓய்வு பெற இன்னும் நான்கு வருடங்கள் தானே என்று அசராமல் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறார் என் தந்தை அவருக்கு பக்கபலமாய் என் தாய். கூடிய விரைவில் நாடு திரும்பி அவர்களுடன் வாழ ஆசை.
என் குடும்பம் ஒரு கதம்பம்....!!!
இந்த பதிவினை என் தாய் தந்தையர்க்கு சமர்பிக்கிறேன்.

nalla post boss...
ReplyDeleteநன்றி
Deleteபடிக்கும் போதே மகிழ்ச்சி ஆறாய் பெறுக்கிறது. நீங்கள் எழுதும் போது எவளவு மகிழ்ச்சியுற்றிருப்பீர்கள் என்று உணர முடிகிறது :):) நல்ல விதமாக உங்கள் வாழ்க்கையை சுருக்கமாக சொல்லியுள்ளீர்கள் :) வாழ்த்துக்கள். . இன்னும் மென் மேலும் வெற்றிகள் புரிய வாழ்த்துக்கள் தோழரே :):)
ReplyDeleteஉயர்வோம் உயர்த்திடுவோம் !
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி....ஆம் எனது சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை தான் இதனை எழுதும் பொது கண்ணீரும் துளிர்த்தது.
ReplyDeleteநல்ல பதிவு.. சில எழுத்துபிழைகளை கவனத்தில் கொண்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteஎழுத்துபிழை பெரிய பிழையாச்சே......சரி திருத்திக்கொள்வோம்
Delete